ரேஷன் கடைகளுக்கு விடுமுறை திமுக தொழிற்சங்கத்தினர் அரசுக்கு நன்றி

சென்னை: ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் கொண்டாடும் வகையில் இன்றும், நாளையும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவித்ததையொட்டி, திமுக தொழிற்சங்கத்தினர் அமைச்சர் பெரியகருப்பனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். ரேஷன் கடை ஊழியர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், வருகிற 16ம் தேதி (திங்கள்) வேலை நாள் என்று அறிவித்ததை, விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றிய செய்தி ‘தினகரன்’ நாளிதழில் வெளியானது. இதையடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கூட்டுறவு பண்டக சாலைகள் மாநில தொமுச பொதுச்செயலாளர் பத்மநாபன், டியுசிஎஸ் தொமுச பொதுச்செயலாளர் ராஜன் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Related Stories: