×

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: குவியும் பக்தர்கள்: ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில்  பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று நடப்பதையொட்டி பக்தர்கள்  குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப  விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று  முன்தினம் பந்தளத்தில் இருந்து  புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு  தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி  தெரியும். மகர ஜோதியை தரிசிப்பதற்காக பக்தர்கள் சபரிமலையில் குவிந்த  வண்ணம் உள்ளனர்.

கடந்த 11ம் தேதி எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு  சபரிமலைக்கு வந்த ஏராளமான பக்தர்கள்  மகரஜோதியை தரிசிப்பதற்காக ஆங்காங்கே குடில் கட்டி தங்கி  உள்ளனர். நேற்று காலை 11 மணியுடன் நெய்யபிஷேகம்  நிறுத்தப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில்  மகரவிளக்கு பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் சுத்திக்கிரியைகள் நடைபெற்றது.  தொடர்ந்து 25 கலச பூஜையும், களபாபிஷேகமும் நடைபெற்றது.

மகரவிளக்கு  பூஜை தினத்தன்று நெரிசலை கட்டுப்படுத்த ஏடிஜிபி அஜித்குமார் தலைமையில் ஐஜி  ஸ்பர்ஜன் குமார், டிஐஜி நிஷாந்தினி மேற்பார்வையில் சபரிமலையில் 4  ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில்  மட்டும் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து  செய்யப்பட்டுள்ளது.

Tags : Makar Lampu Puja ,Sabarimala , Makar Lampu Puja at Sabarimala today: Devotees throng: Online booking cancelled
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...