தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளராக ரவீந்திரன் நியமனம்

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற ரவீந்திரன், ரயில்வே பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்கும் முன்பு தெற்கு ரயில்வேயின் தலைமை உரிமை கோரல் அதிகாரியாக பதவி வகித்தார்.

ரயில்வே நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் ரயில்வே சரக்கு நடவடிக்கைகளில் பல்வேறு அனுபவங்களை பெற்றவர். ரவீந்திரன் சிறந்த சேவைக்கான விருதை ரயில்வே அமைச்சரிடம் பெற்றுள்ளார்.

Related Stories: