×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் அமைச்சர் நாசர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 30 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை நேரடியாக வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியார்களுக்கு 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் 1325 பணியாளர்களுக்கு ரூ.12.58 இலட்சம், மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 2,969 பணியாளர்களுக்கு ரூ.28.47 இலட்சம் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 22,895 பணியாளர்களுக்கு ரூ.228.95 இலட்சம் ஆக மொத்தம் 27,189 பணியாளர்களுக்கு ரூ.270 இலட்சம் பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகையை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் 13.01.2023 அன்று 30 பணியாளர்களுக்கு நேரடியாக வழங்கினார்.

இதற்கான மொத்த செலவீனம் ரூ.270 இலட்சம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  சங்கங்களின் நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. மேலும், தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 603 சங்கங்களில் உள்ள 98,877 பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு, சங்கங்கள் ஈட்டிய இலாபத்திலிருந்து ரூ.1,295.59  இலட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார்.

Tags : Pongal festival ,Minister ,Nasser ,AAV , Pongal Festival, Incentives for Aavin employees, Minister Avadi Nasar, Government of Tamil Nadu
× RELATED பேச்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா