×

ரூ. 10 ஆயிரம் சம்பளத்திற்கு கஞ்சா கடத்தி வந்த ஒடிசா ஆசாமி கைது

தாம்பரம், :தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் இருந்த பையில் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை தாம்பரம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சன் பர்த்தி கும்பார் (34), அங்கு போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு அதே மாநிலத்தை சேர்ந்த பர்வேஸ் மாலிக் என்பவரிடம் கஞ்சாவை பெற்றுக் கொண்டு சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வந்து குறிப்பிட்ட நபரிடம் வழங்கி சம்பளமாக 10 ஆயிரம் ரூபாய் பெற்று வந்ததும், கடந்த 9ம் தேதி ஒடிசாவில் இருந்து 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, தாம்பரத்தில் உள்ள சாம் என்பவரிடம் கொடுப்பதற்காக மின்சார ரயிலில் வந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Rs ,Odisha , Rs. 10 thousand salary, Ganja, Odisha Asami, arrested
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...