×

ஆர்ஆர்ஆர் பட பாடலுக்கு கோல்டன் குளோப் விருது

லாஸ்ஏஞ்சல்ஸ்: கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல் தொகுத்து வழங்கினார். விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற பெருமையை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்றிந்தது.

இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வில், இயக்குநர் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். அந்த வகையில், இந்தாண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் வென்றது. மேடையில் இந்த விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக்கொண்டார்.

கோல்டன் குளோப் விருதை குறிப்பாக இந்த பிரிவில் வாங்கும் முதல் ஆசிய திரைப்படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இந்த பாடல் இடம்பெற்றிருந்த இதே பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற ஹாலிவுட் பாடல்களுக்கு மத்தியில் நாட்டு நாட்டு பாடல் இந்த விருதை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Golden Globe Award for RRR Film Song
× RELATED வியட்நாம் அதிபரானார் டோ லாம்