×

பாம்பன் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து ரத்து

ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் [மெயின் லைன் (16751/16752), கார்ட் லைன் (22661/22662) வழி ரயில்கள், திருப்பதி ராமேஸ்வரம் திருப்பதி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (16779/16780), கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை ரயில்கள் (22622/22621), அஜ்மீர் - ராமேஸ்வரம் - அஜ்மீர் (20973/20974), பனாரஸ் - ராமேஸ்வரம் - பனாரஸ் (22536/22535),

ஓஹா - ராமேஸ்வரம் - ஓஹா (16734/16733) வாராந்திர விரைவு ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள், அயோத்தியா கண்டோண்மென்ட் - ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோண்மென்ட் (22614/22613), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (20896/20895), ஹூப்ளி - ராமேஸ்வரம் - ஹூப்ளி (07355/07356), கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் (16618/16617), செகந்திராபாத் - ராமேஸ்வரம் - செகந்திராபாத் (07695/07696) வாராந்திர விரைவு ரயில்கள் ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

Tags : Bomban Bridge , Train service canceled at Pampan Bridge till further notice
× RELATED சீரமைப்பு பணிக்காக பாம்பன் பாலத்தை கடந்த விசைப்படகுகள்