கவுகாத்தி: இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசினார். விராட் கோலி 80 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர்
உதவியுடன் சதமடித்தார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி அடித்த 45-வது சதம் இதுவாகும். ஒருநாள் போட்டியில் சச்சினின்(49) சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 5 சதங்கள் தேவை.
