×

4 நாட்களில் 15 முறை வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகர் மெக்கார்த்தி: 163 ஆண்டுகளுக்கு பிறகு நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக 15வது சுற்று வாக்கெடுப்பில் குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி வெற்றி பெற்று தேர்வாகியுள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த இடைக்கால தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் அதிபர் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்தது. இந்த தேர்தலில் டிரம்ப்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும் ஜனநாயக கட்சி 212 இடங்களையும் பெற்றது. இதன் காரணமாக பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி பதவி விலகினார். சபாநாயகருக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் கெவின் மெக்கார்த்தியும், ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் சீகோ ஜெப்ரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். பெரும்பான்மை இடங்கள் இருப்பதால் மெக்கார்த்தி எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரது கட்சியை சேர்ந்த சிலர் அவருக்கு வாக்களிக்கவில்லை. இதனால் மெக்கார்த்தியை தேர்வு செய்வதில் கடந்த 4 நாட்களாக இழுபறி நீடித்து வந்தது. 14 முறை வாக்குப்பதிவு நடத்தப்பட்டும் மெக்கார்த்தி தோல்வியை தழுவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை நடந்த 15வது சுற்று வாக்குப்பதிவில் ஒரு வழியாக கெவின் மெக்கார்த்தி வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வானார். வரலாற்றிலேயே ஐந்தாவது முறையாக மிக நீண்ட போட்டிக்கு பிறகு சபாநாயகராக மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட வாக்கெடுப்பு கடந்த 1855ம் ஆண்டு நடைபெற்றது. இது இரண்டு மாதங்கள் நீடித்தது. சுமார் 133 சுற்று வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : McCarthy ,US Parliament , 15 votes in 4 days: McCarthy as new US House speaker: 163-year tug-of-war ends
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...