×

சர்பராஸ் அபார சதம்; நியூசிலாந்துக்கு எதிராக டிரா செய்தது பாகிஸ்தான்

கராச்சி: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், சர்பராஸ் கானின் அபார சதத்தால் போராடி டிரா செய்த பாகிஸ்தான் அணி தொடரையும் 0-0 என சமனில் முடித்தது. கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 449 ரன் குவிக்க, பாகிஸ்தான் 408 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

41 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது (82 ஓவர்). 319 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான், ரன் ஏதும் எடுக்காத நிலையில் 2 விக்கெட்டை இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. கடைசி நாளான நேற்று அந்த அணி 80 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், அனுபவ வீரர் சர்பராஸ் - ஷகீல் ஜோடி கடுமையாகப் போராடி டிரா செய்ய உதவியது.

ஷகீல் 32 ரன், ஆஹா சல்மான் 30 ரன், ஹசன் அலி 5 ரன், சர்பராஸ் 118 ரன் (176 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 287 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு ஓவரில் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினால், தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் நியூசி. தரப்பு தாக்குதலை தீவிரப்படுத்தியது. எனினும், பாகிஸ்தான் 90 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்த நிலையில் போட்டி டிரா ஆனது. சர்பராஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.


Tags : Sarbaras ,Pakistan ,New Zealand , Sarbaras great century, Pakistan draw against New Zealand
× RELATED சில்லிபாயிண்ட்….