×

சட்டப் பேரவை கூடும் நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜனவரி 10ம் தேதி நடக்கிறது: கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை:  ஜனவரி 10ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவை வரும் 9ம்தேதி கூடுகிறது. இக்கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையுடன் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். பேரவை கூட்டத் தொடர் குறித்தும், ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் கடந்த 4ம்தேதி அமைச்சரவை கூடி விவாதித்தது. இந்நிலையில், சட்டப் பேரவை கூடுவதை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 10ம்தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.  

இதுகுறித்து, அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 10ம்தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Dizhagam ,Council ,Govi , Legislative Assembly, DMK MLAs meeting, Kovi Chezhyan announcement
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும்...