×

 உக்ரைன் போர் 36 மணி நேரம் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் போர் இன்று மதியம் முதல்36 மணி நேரம் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். ரஷ்யா-உக்ரைன் மோதல் 316வது நாளை எட்டிவிட்டது.  இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை. தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்ய பகுதியாக  ஏற்றுக்கொண்டால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதின் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட வசதியாக இன்று மதியம் முதல் நாளை வரை 36 மணி நேரம் போரை நிறுத்த அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Ukraine ,Putin , 36-hour ceasefire in Ukraine war: Putin's announcement
× RELATED உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் நவீன போர் விமானம் சேதம்