×

 ஈஞ்சம்பாக்கம் மயான பூமி மேலும் ஒரு மாதம் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையிலுள்ள இந்து ஊரூர் மயானபூமியில் உள்ள எரிவாயு தகன மேடையினை மின் மயான பூமியாக மாற்றுவதற்காக, கடந்த மாதம் 2ம்தேதி முதல் நாளை வரை மயான பூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது இந்த மயான பூமியில் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால், வரும் 8ம்தேதி முதல் பிப்ரவரி 7ம்தேதி வரை மயான பூமி இயங்காது. எனவே, பொதுமக்கள் பெருங்குடி மண்டலம், வார்டு-182க்குட்பட்ட கந்தன்சாவடி மற்றும் அடையாறு மண்டலம், வார்டு-174க்குட்பட்ட பெசன்ட் நகர் எரிவாயு தகன மேடையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Enchambakkam ,Mayan Bhoomi , Enchambakkam Mayan Bhoomi remains closed for one more month: Corporation notice
× RELATED ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை