×

பொங்கலை முன்னிட்டு விராலிமலையில் பகுதியில் மண்பாண்டம் உற்பத்தி தீவிரம்: மண் எடுப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தல்

விராலிமலை: விராலிமலை சுற்றுப்பகுதி கிராமங்களான சேதுராப்பட்டி, ராமகவுண்டம்பட்டி, திருவேங்கைவாசல், இடையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பானை செய்யும் தொழிலில் மண்பாண்டம் உற்பத்தி தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சரளை மண் எடுக்க அரசு விதித்திருக்கும் தடையை தளர்த்தினால் மட்டுமே இத்தொழில் நிலைத்து நிற்கும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். பண்டையகாலத்தில் அனைத்து வகை உணவுகளையும் மண்பாண்டங்களில் சமைத்து உண்டு நமது முன்னோர்கள் நீண்ட நாள் வாழ்ந்து வந்தனர். இதனால் பண்டைய காலத்தில் மண்பாண்ட உற்பத்தி தொழில் கொடிகட்டி பறந்தது.

இதில் பெரும்பாலான கிராமங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வம்சாவளியாக தொடர்ந்து இத்தொழிலில் அப்போது ஈடுபட்டு வந்தனர். நாளடைவில் வளர்ந்து வந்த புதிய தலைமுறையினர் நாகரீக வளர்ச்சி என்ற பேரில் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தி வந்த மண்பாண்டங்களின் பயன்பாட்டை வெகுவாக குறைத்து கொண்டனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட வந்த தொழிலாளர்கள் அந்த தொழிலை கைவிட்டு மாற்று தொழிலை தேடிச் சென்றுவிட்டனர்.

இதனால் இப்போது மண்பாண்ட உற்பத்தி நடைபெறும் கிராமங்கள் மற்றும் அத்தொழிலில் ஈடுபடுபவர்களை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு வெகுவாக தமிழகத்தில் குறைந்து விட்டனர். மிஞ்சியிருக்கும் அவர்களும் வேறு தொழில் தெரியாததால் இத்தொழிலயே தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு வருடம் முழுவதற்கும் வாழ்வாதாரமாக துணை நிற்கும் பண்டிகைகளில் பொங்கல் முதலாவதாகும். மேலும் கார்த்திகை தீபம் உள்ளிட்ட பண்டிகைகள் துணை நிற்கின்றன.

அதிலும் பணியாளர்கள் இல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர்களே முழுவதுமாக மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வருவதால் ஓரளவு பெருளாதார நெருக்கடி இல்லாமல் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியோடு நகர்ந்து வருகிறது.இந்த நிலையில் விராலிமலை அருகே உள்ள சேதுராப்பட்டி கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சுந்தர்ராஜ்(33) இத்தொழில் பற்றி கூறும்போது, முதலாவதாக சரியான மண்ணை தேர்ந்தெடுக்கிறோம்.

அந்த மண்ணை வாகனம் மூலம் உற்பத்தி கூடத்திற்கு கொண்டு வந்து அதை காயவைத்து பிறகு தண்ணீரில் கலவையாக்கி அதில் இருக்கும் சிறுகற்களை வடிகட்டி சுத்தமான களிமண்ணாக்கி அதை இரண்டு நாட்கள் தண்ணீரில் காயவைத்து பிறகு அதை கால்களால் மிதித்து கையால் பிசைந்து பக்குவத்துக்கு கொண்டு வரப்படும். பின்னர் திருகையில் வைத்து பாத்திரமாக உருவாக்கி அதனை மரக்கட்டைகளால் தட்டி தட்டி தூர் பகுதியை ஒன்றிணைத்து, நிழலில் உலரவைத்து, அதை அடுப்பு உலையில் ஏற்றிய பின் கிடைப்பதே பயன்பாட்டுக்கு தகுந்த மண்பாத்திரமாகும்.

தற்போது கால் கிலோ முதல் 5 கிலோ வரை சமைக்கும் மண் பாத்திரத்தை உருவாக்கி வருவதாகவும் விழா காலங்கள் போக மீதி நாட்களில் எல்லை கோயில் தெய்வங்களை சுடுமண்ணில் செய்வதும், பெரிய, சிறிய மண் குதிரை செய்து தரும் பணியில் ஈடுபட்டும் வருவதாக கூறுகிறார். பல்வேறு நிலையின் செயல்முறையை தாண்டிய பின்னர் தான் சுத்தமான மண் பாத்திரம் நுகர்வோர் கைகளுக்கு கிடைக்கிறது. இவ்வளவு உழைப்பை சிந்திய எங்களுக்கு கிடைப்பது ஒரு பானைக்கு உற்பத்தி செலவு போக ரூ.10 லிருந்து 15 வரை மட்டுமே மிச்சுகிறது.


இருந்தும் தெரிந்த இந்த தொழிலை விட்டு வெளியேற முடியவில்லை பிள்ளைகள் பள்ளிக்கு சென்று பாடம் படித்து வரும் போதிலும் மிஞ்சிய நேரத்தில் மண்பாண்ட தொழிலை கைத்தொழிலாக கற்றுத்தருகிறோம் என்று தொழிலாளி சுந்தர்ராஜ் மற்றும் அவரது மனைவி பாப்பு(31) ஆகியோர் தெரிவித்தனர்.சரளை மண் எடுப்பதற்கு தாசில்தார் ஒப்புதல் பெற்ற பின் தான் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி எளிதாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சரளை மண் கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மண்பாண்ட தொழிலாளர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக





Tags : Viralimalaya ,Pongala , Intensity of pottery production in Viralimalai ahead of Pongal: Urge to remove ban on digging
× RELATED காணும் பொங்கலை முன்னிட்டு...