தொடர்ந்து உதவித்தொகைபெற மாற்றுத்திறனாளிகள் 6ம் தேதிக்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்: காஞ்சி கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடிதத்தின்படி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2000  பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் தொடர்ந்து பெறவேண்டுமாயின் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல், புகைப்படம்-1 மனவளர்ச்சி குன்றியோர் பெற்றோர்களுடன் இணைந்த புகைப்படம்-1 தனித்துவம் வாய்ந்த, தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகிய குறிப்பிட்டுள்ள அனைத்து நகல்களும்  இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்  மூலமாகவோ வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலக தொலைபேசி எண்ணில் (044-29998040) தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: