×

ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க பேரவையில் தீர்மானம்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளில் தமிழர்களுக்கு மாநில ஒதுக்கீடு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதை வலியுறுத்தி வரும் 9 ம் தேதி தொடங்கப்படவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தையும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamils ,BAMA ,President ,Anbumani , Assembly Resolution to Give Priority to Tamils in Union Government Jobs: BAMA President Anbumani insists
× RELATED முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில்...