×

கோவையில் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி திடீர் பலி

கோவை: கோவையில் பிரியாணி சாப்பிட்ட பள்ளி மாணவி திடீரென இறந்தார். கோவை வேலாண்டிபாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இந்து பிரியா(12) அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த இந்து பிரியாவுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது. வயிற்றுவலியால் துடித்த அவரை பெற்றோர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இந்துபிரியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சாயிபாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சம்பவத்தன்று கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாகவும், அது செரிமானம் ஆகாமல் உணவு விஷமாகி அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது. 


Tags : Coimbatore , A schoolgirl suddenly died after eating biryani in Coimbatore
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!