இலங்கையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கை: இலங்கையில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கண்டி ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்தது கண்டி நகரில் சாலைகளில் வெள்ளம், ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது, அது போல கண்டி ரயில் நிலையத்தில், தண்டவாளம், நடைமேடை, பயணிகள் நிற்கும் இடம் என எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நின்றது.

இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். நாகவல்லி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொல்கொல்ல அணை முழ்கும் அளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது, கண்டி அருகே அழகாது பகுதியில் விடு இடிந்து விழுந்ததில் 18 வயது சிறுமி, 16 வயது சிறுவன் ஆகியோர் உயிர் இழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய அவர்களது பெற்றோர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

Related Stories: