×

வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ வெண்மணியில் 1967ம் ஆண்டு கூலி உயர்வு கேட்ட விவசாய கூலி தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கீழ வெண்மணியில் போராட்டக்காரர்களுக்கு பயந்து கூரை வீடு ஒன்றில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பதுங்கி இருந்தனர். அப்போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 44 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

ஆண்டு தோறும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 25ம் தேதி வெண்மணிகள் தியாகிகள் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுகிறது. நேற்று தியாகிகள் 54ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி புதிதாக கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தியாகிகள் நினைவிடத்தில் மக்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


Tags : Venmani Tyagis ,Remembrance Day , Observance of Venmani Tyagis Remembrance Day
× RELATED பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம்:...