×

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் 4ம் தேதி கரைச்சுத்துபுதூரில் உள்ள வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் இருந்து கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தின் அடிப்படையில் அரசியல் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஜெயக்குமார் கடைசியாக சென்ற கடையின் உரிமையாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று சிபிசிஐடியினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஜெயக்குமார் அடிக்கடி வந்து செல்லும் ஓட்டல்கள், டீ கடைகள், பெட்டிக்கடைகள் மற்றும் மரக்கடைகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு, எஸ்பி முத்தரசி ஆகியோர் பாளை பெருமாள்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் சம்பவம் நடந்த கரைசுத்துபுதூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி ஏடிஜிபி, ஐஜி, எஸ்பி ஆகியோர் நேரிடையாக பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் உடல் கிடந்த கரைச்சுத்துப்புதூர் தோட்டத்தில் சிபிசிஐடி உயரதிகாரிகள் நேற்று பிற்பகல் 3 மணி முதல் 5.20 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குடும்பத்தின மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellie Congress ,CBCID ,ATGP ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Karaichuthuputur ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்