×

பீட்சா, குளிர்பானம் சாப்பிட்டு தூங்கியவர் நடிகர் மம்மூட்டி மகனின் கார் டிரைவர் மர்ம மரணம்: அபிராமபுரம் போலீசார் விசாரணை

சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். துல்கர் சல்மான் வீட்டில் டிரைவராக வடபழனியை சேர்ந்த பாஸ்கர் (51) பணியாற்றி வந்தார். டிரைவர் பாஸ்கர் நேற்று முன்தினம் முழுவதும் துல்கர் சல்மான் வீட்டில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. பிறகு இரவு 10 மணிக்கு பீட்சா மற்றும் குளிர்பானத்தை சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். நேற்று காலை வெளியே செல்ல டிரைவர் பாஸ்கரை எழுப்ப சென்ற போது, அவர் தூங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து பாஸ்கரை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் துல்கர் சல்மான் வீட்டின் பணியாளர்கள் சம்பவம் குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் மர்மமான முறையில் இறந்து கிடந்த பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் பீட்சா மற்றும் குளிர்பானத்தால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags : Mammootty ,Abhiramapuram , Actor Mammootty's son's car driver who fell asleep after eating pizza and soft drinks mysteriously died: Abhiramapuram police probe
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...