×

என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி : பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்படும் என பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மீத்தேன், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும். மேலும் ரூ.100 கோடி செலவில் திருக்கோவில்கள் புதுப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 
மேலும் நீதிக்கட்சி வரலாற்று தொடர்ச்சியில் திமுக ஆட்சி அமைத்து இருப்பதை பெருமையாக கருதுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என தெரிவித்தார். கவர்னர் உரை ஒரு முன்னோட்டம் தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும் என கூறினார். கடந்த இரண்டு தினங்களாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்த அரசுக்கு சொன்ன நல்ல ஆலோசனைகளாக எடுத்துகொள்கிறேன் என தெரிவித்தார். 

The post என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி : பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,BC ,G.K. Stalin ,Chennai ,MBC ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்