×

தமிழ்நாட்டில் பசுமைவனப்பரப்பை 33% ஆக அதிகரிக்கும் பணி தீவிரம்: ஒட்டன் சத்திரம் அருகே 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாளை மறுநாள் நடைபெறும் உலக சாதனைக்காக 117 ஏக்கர் பரப்பளவில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணி தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சரின் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பசுமை வனப்பரப்பை 28 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள இடையன்கோட்டையில் அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டில் 117 ஏக்கர் பரப்பளவில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் உலக சாதனை நடத்தும் விதமாக, மரக்கன்றுகளை நடும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இப்பணியில் 6500 இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கின்றனர். தேக்கு, சந்தனம், செம்மரம் உட்பட மூலிகை மரம் என 43 வகையான மரங்கள் நடப்படுகின்றன. மரக்கன்றுகள் நடப்படவுள்ள இடத்தில் இருந்து சீமைக்கருவேலமரங்கள் அகற்றப்பட்டன. இப்பணியில் கடந்த மூன்று மாதமாக 8500 பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Tags : Tamil Nadu ,Otton Sinn , Tamilnadu, green forest cover, saplings, project
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...