×

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற குகேஷுக்கு பாராட்டு: வேலம்மாள் பள்ளி சார்பில் ரூ.10 லட்சம் வழங்கி ஆனந்த் வாழ்த்து..

சென்னை : உலகின் தலைசிறந்த நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி சாம்பியன் வேண்டும் என்பதே செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அண்மையில் மாமல்லபுரத்தில் நடத்திய 4-வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணியில் இடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்ற குகேஷுக்கு அவர் படிக்கும் அயனம்பாக்கம் வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்ம விபூஷன் விருது பெற்ற செஸ் வீரர்  விஸ்வநாதன் ஆனந்த் பள்ளி நிர்வாகம் சார்பில் அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கி கவுரவித்தார்.

இதையொட்டி குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குகேஷ் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சக மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் பேசிய விஸ்வநாதன் ஆனந்த் குகேஷுன் திறமையை வெகுவாக பாராட்டினார். நான் பார்த்த வரையில் தனக்கு எதிரே விளையாடும் வீரர் யார் என்பது பற்றி குகேஷ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இதுவே, அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று ஆளுநர் புகழாரம் சூட்டினார். நிகழ்ச்சியில் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Tags : Gukesh ,Chess Olympiad ,Anand ,Velammal School , Chess, Olympiad, Gold, Gukesh, Velammal, Anand, Greetings
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி: 17 வயது குகேஷ் அபார சாதனை