×

ஆவடி தொகுதியில் அதிமுக வெற்றி எதிர்த்து திமுக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் சாட்சியம்

சென்னை: 2016 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் மாபா பாண்டியராஜன் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பணப்பட்டு வாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் நேரில் ஆஜராகி சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை ெசய்தார்.  விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.   


Tags : DMK ,ADMK ,Aavadi , Election case filed by DMK candidate against ADMK's victory in Aavadi constituency: ADMK candidate's testimony in High Court
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி