
குலசேகரம்: குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய இயற்கை சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 2வது நாளாக திற்பரப்பு அருவியில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.