பல ஆண்டுகளுக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்தில் அதிகமாக குவியும் பறவைகள்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின் வெளிநாடுகளிலிருந்து பறவைகள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. பறவைகளின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை (பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு ஆகும்.

மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, ரஷ்யாவிலிருந்து வரும் 40க்கும் மேற்பட்ட சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம், ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன் (ஆலா), இமாச்சல பிரதேசத்திலிருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் வந்து செல்கின்றன. இங்கு வரும் 290 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 240க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வந்து செல்கிறது.

தென் மாநிலங்களுக்கு அரிதாகவே வரும் இந்த பறவைகள் தற்போது கோடியக்கரையில் காணப்படுகின்றன. இந்த கண்டு ஜரோப்பிய நாடுகளில் இருந்து ஊசிவால் வாத்து, நீலசிறகு வாத்து, நாம தலை வாத்து, புள்ளிவாத்து, கிளுவை வாத்து, பிங் டைல் வாத்து, அதிக அளவில் வந்துள்ளது இதேபோல் ராஷ்யாவில் இருந்து பவளக்கால் உள்ளான், உப்பு திண்ணி கொட்டான், பறவைகளும் வந்துள்ளன. உள்நாட்டு பறவைகளான வண்ண நாரை, கூழைகிடா பறவைகளும் அதிக அளவில் காணப்படுகிறது. சென்ற ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் ஒரு லட்சம் பறவைகள் மேல் வந்தது. இந்த ஆண்டு பல லட்சம் பறவைகள் வந்துள்ளன.

இது குறித்து கோடியக்கரை வனசரகர் அயூப்கான் கூறியதாவது: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் கோடியக்கரை முனியப்பன் ஏரி, பம்ப் ஹவுஸ், கடற்கரைபகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகளை காணலாம். சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி, பைனாகுலர், தங்கும் இடம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.v

Related Stories: