×

கோடியக்கரை சரணாலயத்துக்கு இலங்கை கடல் காகங்கள் அதிகளவில் வருகை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு சீசன் காலமாகும். பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்லும்.

தற்போது சீசன் உச்சத்தில் உள்ளது. ரஷ்யா, ஈரான், ஈராக், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து செங்கால்நாரை, வரித்தலை வாத்து, கூழைக்கிடா, 40 வகையான சிறவி பறவைகள் என 247 வகையான பறவை இனங்கள் லட்சக்கணக்கில் வந்து கடந்த சில மாதங்களாக தங்கியுள்ளன. அதோடு இந்த முறை இலங்கையில் இருந்து கடல் காகங்கள் அதிகளவில் கூட்டம் கூட்டமாக வந்துள்ளன. காலை, மாலை ேவளைகளில் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

The post கோடியக்கரை சரணாலயத்துக்கு இலங்கை கடல் காகங்கள் அதிகளவில் வருகை appeared first on Dinakaran.

Tags : Kodiakkarai Sanctuary ,Vedaranyam ,Nagai ,Kodiakarai ,Russia ,Iran ,Kodiakarai Sanctuary ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை