×

முதியவரின் சொத்தை அபகரித்த மகனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்டிஓ உதவியாளர் சஸ்பெண்ட்: இரவோடு இரவாக கலெக்டர் அதிரடி

மதுரை: மதுரை, திருப்பாலையை சேர்ந்தவர் சதாசிவம் (82). முன்னாள் ராணுவ வீரர். மத்திய கலால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2021ல் மனைவி இறந்தபிறகு மகன்கள், மகள் முறையாக கவனிக்கவில்லை. இவரது 2வது மகனும் மருமகளும் கோவையில் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகின்றனர். மகளால் கவனிக்க முடியவில்லை என்று கூறி சதாசிவம் கோவையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது பெயரில் இருந்த சொத்து, நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்ட மகன், வீட்டை விட்டு விரட்டி விட்டுள்ளார்.

கடந்த 6 மாதத்திற்கு முன் மதுரை ஆர்டிஓவிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி முதியவர் சதாசிவம் மதுரை கலெக்டர் அனீஷ் சேகரை சந்தித்து நேற்று முன்தினம் புகார் அளித்தார். அப்போது, ஆர்டிஓ நேர்முக உதவியாளர் செல்வராஜ், என் மகனுடன் பேசி அவருக்கு சாதகமாக செயல்படுகிறார் எனக் கூறி அதற்கான ஆடியோ உரையாடலை கலெக்டரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து கலெக்டர், ஆர்டிஓ உதவியாளரிடம் இரவோடு இரவாக விசாரணை நடத்தி செல்வராஜ் மீதான புகார் உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


Tags : RTO , RTO Assistant suspended for acting in favor of son who stole old man's property: Collector action overnight
× RELATED அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு