×

ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை

மாஸ்கோ: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையத்தில் பணியாற்றியவர் எட்வர்ட் ஸ்னோடன். இவர், அமெரிக்க அரசு அதிநவீன உளவு கருவிகளை வைத்து தீவிரவாதிகளை மட்டுமின்றி வேறு பலரையும் உளவு பார்ப்பதாக ரகசிய ஆவணங்களை கடந்த 2013ல் வெளியிட்டார். இதனால் அமெரிக்காவின் கைது நடவடிக்கைக்குப் பயந்து ரஷ்யாவில் அவர் தஞ்சமடைந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் இறுதியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தபடி, ஸ்னோடனுக்கு ரஷ்ய பாஸ்போர்ட், குடியுரிமை  வழங்கப்பட்டதாக அவரது வக்கீல்கள் நேற்று தகவல் வெளியிட்டுள்ளனர்.

Tags : Snowdan , Russian citizenship for Snowden
× RELATED கலவர வழக்கில் இம்ரான்கான் விடுதலை