6 ஐபிஎஸ் உட்பட 9 அதிகாரிகள் பணியிடமாற்றம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம்: டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு காவலர் பயிற்சி அகாடமி கூடுதல் பொறுப்பு

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கூடுதல் பொறுப்பாக காவலர் பயிற்சி அகாடமி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பெயர்    பழைய பதவி    புதிய பதவி

சங்கர்    காவல்துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி    சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி

வெங்கட்ராமன்    தலைமையிட கூடுதல் டிஜிபி    கூடுதல் பொறுப்பாக நிர்வாக பிரிவு

ஜெயராமன்    ஊர்காவல்படை,

கூடுதல் கமாண்டன்ட் கூடுதல் டிஜிபி    சென்னை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி

சைலேந்திரபாபு    காவல்துறை டிஜிபி    கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு காவலர் பயிற்சி அகாடமி

சந்தீஷ்    தூத்துக்குடி புறநகர் ஏஎஸ்பி    எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, கோவை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்

மதிவாணன்    கோவை நகர வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்    கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனர்

அசோக்குமார்    கோவை நகர போக்குவரத்து துணை கமிஷனர்    சென்னை சைபர் க்ரைம் பிரிவு-1 எஸ்பி

செல்வகுமார்    நாகை, கடலோர பாதுகாப்பு குழுமம், எஸ்பி    தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி

ராமர்    சென்னை, தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்பி    நாகை, கடலோர பாதுகாப்பு குழுமம் எஸ்பி

Related Stories: