×

கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போக நெல் விவசாய பணிகள் தீவிரம்: இயந்திர நடவு மூலம் செலவு குறைவதாக விசாயிகள் மகிழ்ச்சி

தேனி: கம்பம் அருகே பள்ளத்தாக்கில் 2-ம் போக சாகுபடிக்காக நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, பழனிசெட்டிப்பட்டி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2-ம் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. வயல் பகுதிகளை மாடு பூட்டியும், டிராக்டர் மூலமும் உழுவடைய செய்து நெல் நாற்றுகளை நாடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

நெல் நடவு பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் கும்பகோணம், தஞ்சை மாவட்டங்களில் இருந்து இயந்திரங்களை வரவழைத்து பணிகளை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் 4,000 ரூபாய் பணம் மீதமாவதாகவும், பணியும் விரைவில் முடிவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Tags : Kambam valley ,Visayas , pole, paddy, agricultural, work, mechanical, planting, Visayas, happiness
× RELATED கடும் வெயிலால் வாடிய வாழைகள்