போலீஸ் என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.25,000 பணம் பறித்த ஊர்காவல் படை வீரர் கைது

சென்னை : சென்னை எழும்பூரில் போலீஸ் என கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.25,000 பணம் பறித்த ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார். பொது இடத்தில் புகை பிடித்த தனியார் நிறுவன ஊழியர் கேசவனை (24) சிறையில் தள்ளி விடுவேன் என மிரட்டி பணம் பறித்துள்ளார். கேசவன் அளித்த புகாரின் பேரில் ஊர்காவல் படை வீரர் டான்ஸ் ஸ்டூவர்ட்டை எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: