×

சென்னை கவுன்சிலர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சென்னை மாநகராட்சியின் 165வது வார்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மாநகராட்சியின் 165-ஆவது வார்டு கவுன்சிலரும், தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.

தம் பகுதி மக்களின் தேவைகளுக்காக முன்னின்று அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், காங்கிரஸ் பேரியக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai Councilor ,Nanjil Ishwara Prasad , Chief Minister M.K.Stal condoles the death of Chennai Councilor Nanjil Ishwara Prasad
× RELATED மக்கள் நம்பிக்கை வைத்து...