×

தஞ்சாவூர் மாவட்டத்தில் செண்டி பூ விளைச்சல் அமோகம்: கிலோ ரூ.120க்கு விற்பனை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் செண்டி பூ விளைச்சல் அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு கிலோ செண்டி பூ ரூ.10 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் பகுதியில் செண்டு பூ அதிக அளவில் விளைச்சல் செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் இருந்து கன்றுகள் வரவழைக்கபட்டு இங்கு விவசாயம் செய்யபடுகிறது. இங்கு 1. 5 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு தற்போது அதிக அளவில் பூக்கள் பூத்து இருக்கின்றன.

முதலில் பயிரிடப்படும் கன்றுகள் 60 முதல் 70 நாட்களில் பூக்கள் பூக்கின்றன. பின்பு அந்த பூக்கள் அனைத்தும் அதிகாலையில் பறிக்கப்பட்டு தஞ்சாவூர் பூ சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரணியம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. ஒரு கிலோ செண்டி பூ ரூ.10 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, வருட பிறப்பு, ரமஜான், கிறிஸ்துமஸ் போன்ற விசேஷ நாட்களில் அதிக விலைக்கு விற்பனை ஆகிறது. தற்போது கார்த்திகை நாட்கள் என்பதால் பூக்களின் விலை ரூ.30 முதல் ரூ. 50 வரை விற்கப்படுகிறது.
செண்டி பூ அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்யலாம். அதுவும் எல்லா காலகட்டத்திலும் சாகுபடி செய்யலாம். உரமான தொழு உரத்தை இடலாம்.

செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்து உரத்தினை இட்டு, செடிகளின் வேர் பகுதியில் மண் அணைக்க வேண்டும். செண்டுமல்லி சாகுபடியில் நடவு செய்த 30, 60ம் நாள்களில் களை எடுக்க வேண்டும். செண்டு சாகுபடி பொறுத்தவரை களையெடுக்கும் சமயத்தில் மண் அணைத்தல் அவசியம். இது நன்கு வேர் பிடிக்கவும், செடியினை தாங்குத் திறனை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

30 நாட்களில் செடிகளின் நுனிப்பகுதியை அல்லது செடியின் முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும். இந்த முறைகளை கடைபிடித்தால் நடவு செய்த 60ம் நாளில் இருந்து மகசூல் கிடைக்கும். காலை நேரத்தில் பூக்களைச் செடியில் இருந்து பறித்து கூடை அல்லது சாக்குப் பையில் அடைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம்.

Tags : Thanjavur , Thanjavur district's senti flower yield is high: selling at Rs.120 per kg
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...