×

கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மின் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர்கள், என்எல்சி நிர்வாக இயக்குநர் பிரசன்ன குமார், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர பகுதிகளில் கூடுதல் மின்சார பயன்பாடு, தொழிற்சாலைகளின் தொடர்ச்சியான இயக்கம் உள்ளிட்ட காரணங்களால் மாநிலத்தில் மீன் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் கூடுதல் மின் தேவை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமபுறங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு, மின் உற்பத்தி நிலையங்களின் செயல்பாடு, பழுது நீக்கம் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,CHENNAI ,Sivdas Meena ,Electricity Board ,Shivdas Meena ,Power Board ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோடைக்காலத்தையொட்டி தமிழ்நாட்டில்...