×

புதிய பல்சர் பி150 பைக் பஜாஜ் அறிமுகம்

சென்னை: பஜாஜ் நிறுவனம், பல்சர் பி150 என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது. வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குகள் மிகுந்த வரவேற்பு பெற்றவை. அந்தந்த காலக்கட்டத்துக்கு ஏற்ப புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் பி150 என்ற பைக்கை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் புத்தம் புதிய வடிவமைப்பு ஸ்போர்ட்டியான தோற்றத்தில், ஏரோடைனமிக் 3டி முன்பகுதி, யுஎஸ்பி சார்ர்வசதி, கியர் இன்டிகேட்டர் என பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஸ்க் பிரேக்குடன் உள்ளது. பின்புறம் புதிய மோனோ ஷாக் அப்சர்வர் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பு சிறப்பானதாக இருப்பதோடு, இரட்டை டிஸ்க் வேரியண்டில் முந்தைய மாடலை விட 10 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 149.68 சிசி இன்ஜின், அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 14.5 பிஎஸ் பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பைக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் சர்மா, ‘20 ஆண்டுக்கு முன்பு பல்சர் 150 புதிய ஸ்போர்ட்டியான பைக்காக களமிறக்கப்பட்டது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பைக்கின் மூலம் திறன் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : Bajaj ,Pulsar , Bajaj Launches New Pulsar P150 Bike
× RELATED மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது