×

ஒரு லட்சத்தை தாண்டிய தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது

சென்னை: வரலாற்று உச்சமான ஒரு லட்சத்தை கடந்த நிலையில், தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.1320 குறைந்தது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. காலையில் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,680க்கும் விற்றது. பிற்பகலில் மேலும் ரூ.440 விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,00,120க்கும் விற்றது. தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. அதே நேரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை ஓராண்டில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.42,920 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நேற்று முன்தினம் கடுமையாக அதிகரித்தது. வெள்ளி விலை காலை, மாலை என கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2.15 லட்சத்துக்கும் விற்றது. தொழிற்சாலைகள் பயன்பாடு மற்றும் மின்சாதனப் பொருட்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருதாக கூறப்பட்டது.

நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,350க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு பவுன் ரூ.98,800க்கும் விற்றது. இந்த விலை குறைவு என்பது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல நேற்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, கிராம் வெள்ளி ரூ.211க்கும், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED டிச.17: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39-க்கு விற்பனை..!