×

மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 13ம் தேதி மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் இமாலய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், 15ம் தேதி ‘அந்தர்பல்டி’ அடித்து விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.165-ம், பவுனுக்கு ரூ.1,320-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 350-க்கும், ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது.

நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு பவுன் ரூ.99,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து கிராம் ரூ.12,440க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 உயர்ந்து கிலோ ரூ.2.24 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை மாற்றங்கள், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கும் குடும்பங்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளன. ஜிஎஸ்டி வரி(3%) மற்றும் உற்பத்தி செலவுகள் காரணமாக விலை இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags : Chennai ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகள் ஜி.கே.மணிக்கு...