×

உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் பல்வேறு மாநில அரசு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு ஓராண்டில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, 2022-23ம் கல்வியாண்டில் புதிதாக சேர விரும்பும் தகுதியுள்ள மாணவ-மாணவிகள், கீழ்கண்ட முகவரியில் உள்ள இயக்ககத்தையோ, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது http://bcmbxma/tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பத்தை தகுதியுள்ள மாணவ-மாணவிகள் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அக்கல்வி நிறுவனங்கள் தங்களின் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Chengalpattu Collectorate , Students pursuing higher education can apply for scholarship: Chengalpattu Collectorate
× RELATED செங்கை, காஞ்சி மாவட்டங்களில் விமரிசையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா