×

ஸ்ரீபாலாஜி, ரேலா மருத்துவமனைகள் இணைந்து பிளவு உதடு, அன்னபிளவால் பாதித்த குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீபாலாஜி மற்றும் ரேலா மருத்துவமனைகள் இணைந்து, பிளவு உதடு, அன்னப் பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்தனர். இந்தியாவில் ஏறக்குறைய 70 ஆயிரம் குழந்தைகள் பிளவு உதடு மற்றும் அன்னம்  என்ற குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு இன்னும் அதற்குரிய சிகிச்சை பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு,  குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீபாலாஜி மற்றும் ரேலா மருத்துவமனைகள் இணைந்து, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் குழந்தைகளுக்கு, இலவசமாக இப்பிரச்னையை சரிசெய்யும் அறுவை சிகிச்சை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது.

இதில், பிளவு உதடு, அன்னப் பிளவுள்ள 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு பாட்டு, நடனம், விளையாட்டுகள் மற்றும் ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து பிளவு உதடு மற்றும் அன்னப்பிளவு இருக்கும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கருத்தரங்கும் நடத்தப்பட்டது.  மேலும், பிளவு உதடு மற்றும் அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் 9566230075, 9283222957 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு இந்த சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sri Balaji ,Rela Hospitals , Free treatment for children affected by cleft lip and annapla by Sribalaji and Rela Hospitals
× RELATED ஸ்ரீபாலாஜி, ரேலா மருத்துவமனைகள்...