ஜெயலலிதா மரணம் குறித்து ஆணைய அறிக்கையை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ஆர்.ஆர்.கோபால்ஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ரகசியமும், வெளிப்படைத்தன்மையும் பின்பற்றப்படவில்லை என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு மனு அளிக்க வேண்டும்.  மனு அளிக்காமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: