டிஜிட்டல் இந்தியா குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தாம்பரம்: தாம்பரத்தில் நேற்று டிஜிட்டல் இந்தியா, சாதி கலப்பு திருமணம் பற்றி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தாம்பரத்தில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, டிஜிட்டல் இந்தியா மற்றும் சாதி கலப்பு திருமணம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியின் முதுநிலை இதழியல் துறை சார்பில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், டிஜிட்டல் இந்தியாவின் சமூக ஊடகங்கள் வழியாக ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும், வளர்ந்து வரும் நம்நாட்டில் வளர்ச்சியை நோக்கி முதல் படியாகவும், சிலருக்கு பெரும் அடியாகவும் திகழும் டிஜிட்டல் ஊழல் பற்றிய நாடகம் மற்றும் சாதிக்கை என்னும் தலைப்பில் சாதி கலப்பு திருமணம் பற்றியும், பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்கொடுமை பற்றியும், மாணவர்களுக்கு விழிப்பு ஏற்படுத்தும் வகையில் பறை மோளம் அடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன், தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினர்.

Related Stories: