தமிழக அரசின் நடவடிக்கையால் மைசூரில் இருந்து தமிழகம் வந்த 13,000 கல்வெட்டு மைப்படிகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தமிழக அரசின் நடவடிக்கையால் மைசூரில் இருந்து 13 ஆயிரம் தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தமிழகம் வந்ததுள்ளன என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலகத்தில் நேற்று பேசியதாவது: மைசூரில் உள்ள இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் இயக்குநர் அலுவலகத்தில், கல்வெட்டு பிரிவில்  பல வருடங்களாக இருந்த தமிழ் கல்வெட்டுகளின் மைப்படியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.  அந்த கல்வெட்டு மைப்படிகளை தமிழகம் எடுத்து வர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்தோம். குறிப்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கேவன் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்தார்.

திமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த மைப்படிகளை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்து இருந்தார். இந்த சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய கலாச்சாரத் துறைக்கு  எழுதியிருக்கும் கடிதங்கள் வாயிலாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும். உடனடியாக மைப்படிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், இந்த மைப்படிகள் மைசூரில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறது. இப்போது ஏறத்தாழ 24 ஆயிரம் கல்வெட்டு படிகள் மைசூரில் இருக்கிறது. அவற்றில் 13 ஆயிரம் கல்வெட்டுகளின் மைப்படிகளை அனுப்பி இருக்கிறார்கள். 1887ம் ஆண்டிலிருந்து 1942ம் ஆண்டு வரை இருக்கக்கூடிய மைப்படிகள் அனுப்பப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கல்வெட்டுகளையும் அவர்கள் அனுப்பி வைப்பதாக சொல்லி இருக்கிறார்கள் என்றார்.

Related Stories: