×

எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை!: சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!!

சென்னை: எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை புறக்கணிக்கப்படவில்லை என்றும் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். 
மேலும் வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும்; வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு செயல்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எல்லா மாவட்டங்களையும் ஒரே மாதிரியாகவே பார்ப்பதாகவும், கோவை மாவட்டம் புறக்கணிக்கபடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
பின்னர் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் இதனை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 
இதன் மூலம் கோவை மக்கள் அதிகளவு பயன்பெறுவதோடு தமிழ்நாடு வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார். கோவைக்கு எய்ம்ஸ் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டுள்ளார். 

The post எந்த மாவட்டத்தையும் அரசு புறக்கணிக்கவில்லை!: சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Govt ,Stalin ,BJP ,Legislative Assembly ,Chennai ,Chief Minister ,MC. G.K. Stalin ,Bharathya Janata ,Govai ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!