×

சென்னையில் ஒரு வார சோதனையில் குட்கா விற்ற 112 பேர் கைது: 397 கிலோ புகையிலை பறிமுதல்

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வார சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக  112 பேரை போலீசார் கைது செய்தனா. அவர்களிடம் இருந்து 397 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தி வந்ததாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 397 கிலோ குட்பா புகையிலை பாக்கெட்டுகள், 3 கிலோ மாவா ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, கிண்டி பகுதியில் நடத்தி வாகன சோதனையின் போது பைக்கில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்த சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையை சேர்ந்த அக்துல் ஜாபருல்லா (48), கிண்டி லேபர் காலனி  சேர்ந்த முகமது உசேக் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 56 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், வில்லிவாக்கம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த திருக்கோவிலூர் மேட்டுச்சேரி பகுதியை சேர்ந்த கதிரவன் (29), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த பாலு (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 325 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Chennai , Chennai, one week raid, gutka, 112 people arrested, tobacco seized
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...