×

நாகை அருகே விவசாயிகளுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டம்

நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கடந்த 2021- 2022ம் ஆண்டில் நெற்பயிர்களுக்கு தனியார் நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தனர். இந்நிலையில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. பயிர் காப்பீடு வழங்காத நிறுவனம் மற்றும் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து நாகை அருகே பாலையூர் கிராமத்தில் நேற்று வயலில் இறங்கிய விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாய தொழிலாளர்களுக்கு அல்வா கொடுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

Tags : Nutana ,Nagai , Nutana protest by giving alwa to farmers near Nagai
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு