- அட்டாமுக-பாஜக கூட்டணி
- அமைச்சர்
- ரகுபதி
- சென்னை
- ஆதமுக-பிஜபி கூட்டணி
- சமத்துவம் பொங்கல் திருவிழா
- திமுகா
- புதுக்கோட்டை
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி தேய்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வலுவாக அமையாது என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களுக்கு யாராலும் நெருக்கடி கொடுக்க முடியாது. அதேபோல, பாஜகவும் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது.
பராசக்தி படத்துக்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றிய கேள்விக்கு எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, தமிழக மாணவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த படம்தான் ‘பராசக்தி’. மாணவர்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டம் அது. காங்கிரஸ்காரர்கள் இந்த படத்தை இன்றைக்கு எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த காலகட்டத்தில் இருந்தது பழைய காங்கிரஸ். தற்போது இருப்பது புதிய காங்கிரஸ். இந்த விவகாரத்தால் கூட்டணிக்குள் பிரச்சனை ஏற்படாது எனக் கூறினார்.
