ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார். நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நளினி உள்ளிட்ட அனைவரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்பட 6 பேர் சிறையில் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார்.

Related Stories: