இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்ட யாத்திரை கணேசன் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது: ராகுல்காந்தி, கே.எஸ்.அழகிரி இரங்கல்

டெல்லி: இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்ட யாத்திரை கணேசன் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது என ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸின் அனைத்து யாத்திரைகளிலும் கலந்து கொண்டவர் கணேசன் என ராகுல் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் நடைப்பயணத்தின்போது தஞ்சையை சேர்ந்த கணேசன் காலமானது அதிர்ச்சியளிக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Related Stories: